உள்ளுராட்சி மன்றங்களை மீள அமைக்க அரசாங்கம் முயற்சி!

கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை மீண்டும் அமைப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பான பிரேரணையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கடகொட இன்று (05.07) அவையில் சமர்பித்தார்.

இதனையடுத்து  கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை மீண்டும் அமைக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி சட்டவிரோதமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். 

இது “காக்கைத் திட்டம்” என்று விமர்சித்த சஜித் பிரேமதாச இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகளுக்கு சுதந்திரம் இருப்பதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version