உலக கிண்ண 20-20 தொடரில் இலங்கை, நம்பிபியா அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி இலகுவான வெற்றியினை பெற்றுக்கொண்டது.
நாணய சுறழ்ச்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய நம்பிபியா அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 96 ஓட்டங்களை பெற்றது. இதில் கிரேக் வில்லியம்ஸ் 29 ஓட்டங்களையும், ஜெஹார்ட எராமஷ் 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மகேஷ் தீக்சன 3 விக்கெட்களையும், லஹிரு குமார, வனிது ஹசரங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 13.3 ஓவர்களில் 100 ஓட்டங்களை பெற்றது. இதில் அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும், பானுக ராஜபக்ச ஆட்டமிழ்காமல் 42 ஓட்டங்களையும் பெற்றனர். பத்தும் நிசங்க 5 ஓட்டங்களையும், குசல் பெரேரா 11 ஓட்டங்களையும், டினேஷ் சந்திமால் 5 ஓட்டங்களையும் பெற்றனர்.
நாளை (20/11) இலங்கை அணி அயர்லாந்து அணியோடு விளையாடவுள்ளது.