அயர்லாந்து வெற்றி

உலகக்கிண்ண 20-20 தொடரின் இன்றைய முதற் போட்டியில் அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 7 விக்கெட்களினால் அயர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களை பெற்றது. இதில் மக்ஸ் ஓ டௌட் 51 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
கேர்ட்டிஸ் கம்பர் 4 விக்கெட்களையும், மார்க் ஆடீர் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து அணி 15.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களை பெற்றது. இதில் கரித் டெலானி 44 ஓட்டங்களையும், போல் ஸ்டேர்லிங் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை, நம்பிபியா அணிகளுக்கிடையிலான போட்டி 7.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது.

அயர்லாந்து வெற்றி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version