இன்று நடைபெற்ற விவசாயிகள் போராட்டம், நேற்று நடைபெற்ற மீனவர்கள் போராட்டம் என்பனவற்றை தான் ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை என புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
“சுமந்திரன் தான் தனி மனிதனாக இந்த போராட்டத்தை ஒழுங்கு செய்திருப்பதாக கூறியிருக்கிறார். அவர் அவ்வாறு தனிமனிதராக 2010 ஆம் ஆண்டு கூட்டமைப்பில் இணைவதற்கு முன்னர் தனி மனிதனாக சுமந்திரனாக ஏற்பாடு செய்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.
தற்போது கூட்டமைப்பில் உள்ள ஒருவர். அந்த அடையாளத்தின் மூலமாக மக்கள் அவருக்கு ஆதரவு வழங்குகிறார்கள். ஆகவே கூட்டமைப்பில் உள்ளவர்களோடு கலந்து பேசியதாவது தன்னுடைய ஏற்பாடாக இதனை செய்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வி மீடியாவுக்கு தெரிவித்தார்.
இந்த போராட்டம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்த கருத்துக்கள் முழுமையாக வீடியோ வடிவில் கீழுள்ளது.