நாட்டின் நிதி வங்குரோத்து நிலை குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
பாராளுமன்றம் இன்று (ஜுலை 06) கூடிய நிலையில், சபாநாயகர் மேற்படி அறிவித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நாடு திவாலானது எப்படி என்பதை அறிய ஆளுங்கட்சி உறுப்பினரை நியமிப்பதை ஏற்க முடியாது எனவும் இது திருடனின் தாயிடம் கேட்பது போல இருக்கிறது எனவும் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ”இவ்வளவு முதிர்ந்த அரசியல்வாதி இப்படி ஒரு முட்டாள்தனமான கதையைச் சொன்னதற்காக நான் வருந்துகிறேன். இந்த திவால்நிலைக்கு இந்த அரசாங்கங்கள் அனைத்தும் பொறுப்பேற்க வேண்டும்” எனக் கூறினார்.
எவ்வாறாயினும் தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என சபாநாயகர் அறிவித்துள்ளார்.