கடனை மீளச் செலுத்த கால அவகாசம் வழங்கும் இந்தியா!

இலங்கையின் நிதிச்சுமையை குறைக்க உதவும் வகையில் கடனை மீளச் செலுத்த இந்தியா கால அவகாசம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன்படி 12 ஆண்டு காலம் அவகாசம் வழங்க இந்திய திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.செந்தில்நாதன் இதனைத் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கை அதன் இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கு 7.1 பில்லியன் டொலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளது. இதில் மிகப் பெரிய கடன் வழங்குனராக சீனா உள்ளது. இதனையடுத்து இந்தியாவிற்கு 1.6 பில்லியன் டொலர்களை வழங்க வேண்டும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version