அரசின் வசமாகியது பசில் ராஜபக்ஷவின் வீடு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட வீடொன்று தற்போது அரசு வசமாகியுள்ளது.

மல்வானை பிரதேசத்தில் உள்ள ஆடம்பர வீடே அரசுக்கு சொந்தமானது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச அறிவித்துள்ளார்.

மல்வானையில் உள்ள சர்ச்சைக்குரிய இந்த வீடு தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

குறித்த வீட்டை நீதியமைச்சுக்கு பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளது எனவும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த வீடு அரசுக்கு சொந்தமானது என்று தெரியாமல், போராட்டகாரர்கள் அதற்கு தீ வைத்திருக்கலாம் எனவும் விஜயதாச ராஜபக்ச அறிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version