இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தன் மீதான வழக்கு விசாரணையை ஜூரி சபையின்றி நீதிபதி முன்னிலையில் நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற உலகக்கிண்ணப்போட்டியின்போது, பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு விசாரணை சிட்னி டவ்னிங் சென்டர் நீதிமன்றில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று (ஜுலை 07) மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
தனுஷ்க குணதிலக்க சார்பில் முன்னிலையாகிய சட்டதரணிகள் ஜூரி சபையின்றி நீதிபதி முன்னிலையில் விசாரணை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் கோரிக்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 24 ஆம் திகதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.