கிளிநொச்சி சிசு மரணம் குறித்து ஆய்வு!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த வாரம் பதிவாகிய சிசு மரணங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

குறித்த மரணங்களுக்கான காரணம் தெரியவராத நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர் அதற்காக மூன்று வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply