மட்டக்களப்பில் நெற்பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெற்பயிர்ச் செய்கை விவசாயம் பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் விவசாயப் பணிப்பாளர் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இந்த நோய் பூஞ்சைகளால் கூர்முனை ஏற்படும் போது ஏற்படும் ஒரு நிலை எனத் தெரிவித்துள்ளார்.

இந்த பூஞ்சை நோய் வேகமாக பரவும் அபாயம் உள்ளதால், உடனடியாக பூஞ்சைக் கொல்லிகளை பயன்படுத்த வேண்டியது அவசியம் எனவும் இல்லையெனில் பரவும் அபாயம் கடுமையாக இருக்கும் எனவும் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

விவசாயிகள் பயன்படுத்தும் தரமற்ற பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் நோய் தீவிரமடையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Social Share

Leave a Reply