காலனித்துவ ஆட்சியின்போது கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை இலங்கைக்கு வழங்கும் நெதர்லாந்து!

காலனித்துவ காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 478 பொருட்களை  நெதர்லாந்து  அரசாங்கம் இலங்கை மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு மீள வழங்கவுள்ளது. 

இதன்படி கண்டியின் இராசதானி காலத்தில் இலங்கையில் இருந்து கொண்டுச்செல்லப்பட்ட பீரங்கி, வெண்கலம், தங்கத்தால் செய்யப்பட்ட ஒருவகை சடங்கு ஆயுதம் உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன. 

இந்தோனேசியா, இலங்கை மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின்  கோரிக்கைகளைத் தொடர்ந்து, நெதர்லாந்து அரசாங்கம் மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளது. 

குறித்த பொருட்கள் தற்போது நெதர்லாந்தில் உள்ள  Rijksmuseum அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 

இவை 1765 ஆம் ஆண்டு கண்டி அரண்மனை முற்றுகையின் போது டச்சு கிழக்கிந்தியக் வர்த்தக கம்பனியால் பெறப்பட்ட டச்சு சொத்துக்கள்  என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version