தரமற்ற மருந்து பாவனையால் ஒன்பதுபேர் உயிரிழப்பு!

தரமற்ற மருந்து பாவனையால் கடந்த மூன்று மாதங்களில், 09 பேர் உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்த ஆரச்சி  தெரிவித்துள்ளார்.

சுகாதார துறையை தனியார் மயப்படுத்த வேண்டாம் எனக் கோரிக்கை வைத்துள்ள அவர், நோயாளர்களின் உயிரை பாதுகாக்குமாறும் வலியுறுத்தினார்.

ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் முறையற்ற சில செயற்பாடுகள் காரணமாக நாட்டுக்கு கொண்டு வரப்படும் மருந்துகள் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த மருந்துகளால் மூன்று மாதங்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version