கொழும்பு, நவகமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரசபான பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் பெண்கள் இருவருடன் பாலியல் உறவு கொண்டார் என ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு அவர்கள் நிர்வாணமாக்கப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் சம்மந்தப்பட்ட குழுவினரை கைது செய்யுமாறு பொது பாதுக்காப்பு அமைச்சர் ரிரான் அலஸ் உத்தரவிட்ட நிலையில், 8 நபர்கள் இன்று(08.07) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் கடுவலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை சம்பவம் நடைபெற்ற மறுதினம் பிக்குவின் முறைப்பாட்டுக்கு அமைய நால்வர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தானும் தன்னுடைய உறவுப் பெண் ஒருவரும், அவரது மகளும் ஒரு வீட்டினுள் இருந்த போது, வலுக்கட்டாயமாக வீட்டினுள் இளைஞர் குழு ஒன்று புகுந்து தன்னையும் குறித்த பெண்கள் இருவரையும் தாக்கியதாகவும், வீட்டில் இருந்த தளபாடங்களையும் சேதமாக்கினார் என முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.