உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவித்தல்!

2022 மற்றும் 2023ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான புதிய அறிவித்தல் ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வருடம் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version