ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டுவர முடியும் – சுனில் வட்டகல!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வந்து அவரை பதவிநீக்க முடியும் என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தல் விவகாரத்தில் பணமில்லை என அரசாங்கம் கூறுவது பொய் எனத் தெரிவித்துள்ள அவர்இ இந்த காரணத்தை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி மீது குற்றப்பிரேரணையை கொண்டுவர முடியும் எனவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு உண்மையில் ஏழு பில்லியன் ரூபாவே தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திறைசேரி செயலாளரிடம் ஆவணம் ஒன்றைப் பெற்றுக்கொண்டதாகவும்இ அதன் படி கடந்த பெப்ரவரி மாதம் வரை 6000 கோடி ரூபாய் மேலதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது எனவும் சுனில் வட்டகல மேலும் கூறினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version