கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சசைக்கான திகதிகள் இன்று(11.07) கல்வியமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பித்து டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி முடிவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் நிறைவடைய முன்னர் உயர்தர பரீட்சைகள் நடாத்தப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த உறுதியாக தொடர்ச்சியாக கூறி வந்தார். அதேவேளை 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைகளுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் நிறைவடையுமெனவும் அதே மாதத்தில் முடிவுகள் வெளியிடப்படுமெனவும் அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நத்தார் தினத்துக்கு முன்னதாக பரீட்சசைகளை நிறைவு செய்ய சகல அமைப்புகளும் உறுதியாகவுள்ளதாகவும் மேலும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.