கிளிநொச்சியில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் விளையாட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது!

கிளிநொச்சி மகாவித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்களின் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ என்ற தலைப்பில் விளையாட்டு நிகழ்வு நேற்று(11.07) சிறப்பாக நடைபெற்றது.

கிளிநொச்சி மகாவித்தியாலய பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் அ.இரவீந்திரன் உள்ளிட்ட பலரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதன்போது விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து தேசியக் கொடி, பாடசாலைக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

ஆரம்பக் கல்வி மாணவர்களின் அணி வகுப்பு நிகழ்வினைத் தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியில் மாணவர்களிற்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version