அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரதப் பயணம் மீண்டும் ஆரம்பம்!

அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான புகையிரத புனரமைப்புத் திட்டத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்தன் பின்னர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல தலைமையில் நவீனமயமாக்கப்பட்ட புகையிரத பாதையின் விசேட கண்காணிப்பு இயக்கம் இன்று (13 .07)ஆரம்பிக்கப்பட்டது.

அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரதப் பயணம் மீண்டும் ஆரம்பம்!

மணிக்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட, இந்த ரயிலின் ஓட்டத்திற்காக M 11 வகை இன்ஜின் பொறுத்தப்பட்டுள்ளதுடன் ஒரு ஆடம்பரமான நவீன குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு பயணப்பாதையில் பரிசீலிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜெயந்த கடகொட, ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க, நிர்மாணப்பணிகளுக்கு பொறுப்பான இந்தியன் இர்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் புகையிரத திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர்.

அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரதப் பயணம் மீண்டும் ஆரம்பம்!

இதன் ஆரம்ப நிகழ்வு அநுராதபுரம் புகையிரத நிலைய வளாகத்தில் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது அரியவகை “படு கரந்த” செடியும் அமைச்சர் பந்துலவினால் நடப்பட்டது. நவீனமயமாக்கப்பட்ட ரயில் பாதையின் மையத்தில் பாரம்பரிய சடங்குகளை நிறைவேற்றிய பின்னர் அனுராதபுரத்திலிருந்து பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

Social Share

Leave a Reply