பேராதனை வைத்தியாசலையில் அனுதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஊசி செலுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்தார். இந்நிலையில், இதற்கு தவறான ஊசி செலுத்தப்பட்டதே காரணம் என பெண்ணின் தாயார் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து இலங்கை தாதியர் சங்கம் இன்று (13.07) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி விளக்கமளித்துள்ளது.
இதன்போது குறித்த யுவதிக்கு 10 மில்லி சிரிஞ்ச்கள் மருந்தை வழங்க வேண்டும் எனவும், அந்த சமயத்தில் குறித்த மருந்து கையிருப்பில் இல்லை எனவும் தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மடிவத்தை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட செவிலியிர், 5சிசி சிரிஞ்ச்களில் கரைத்து இந்தமருந்தை கொடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட சிக்கலால் குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.