உடப்பு காளியம்மன் ஆலயத்தில் இன்று (14.07) அதிகாலை 2:20 மணியளவில் உண்டியல் மற்றும் தங்க நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் கடற்கரை நுழைவாயில் வழியாக ஆலயத்திற்குள் வந்த மர்ம நபர் முகத்தை மறைத்த நிலையில் ஆலயத்திலிருந்த உண்டியல்களை உடைத்து பணத்தையும், அம்மனின் நகைகளையும் திருடி சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
ஆலயத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை அடிப்படையாக கொண்டு உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தடயவியல் நிபுணர்களுக்கு அறிவித்துள்ளதுடன் ஆலய வளாகதில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைய காலமாக உடைப்பு பகுதியில், பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களிலும் திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன்,
உடப்பு தெற்கு மீன்பிடி சங்கத்திலும் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாளை மறுதினம் ஆடித் திருவிழா ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.