UNDP பிரதிநிதி யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வு!

யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் கடந்த (12.07) அன்று மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

UNDP பிரதிநிதி யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வு!

இக் கலந்துரையாடலில் UNDP நிறுவனத்தினுடைய இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியும் அதன் குழுவினரும் யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்திருந்தனர்.

UNDP பிரதிநிதி யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வு!

மேலும், யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு நிலையம் அமைத்தல் தொடர்பான கோரிக்கைகளும் UNDP நிறுவனத்தினுடைய இலங்கை நாட்டின் பிரதிநிதியிடம் முன்வைக்கப்பட்டன.

இக்கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என்.கமலாரஜன், UNDP நிறுவனத்தினுடைய இலங்கை நாட்டின் பிரதிநிதி Azusa Kubota, UNDP பிரதிநிதிகள், மாவட்ட செயலக மீள்குடியேற்ற உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply