சினோபெக் எனர்ஜி லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் இலங்கை முதலீட்டு வாரியம் (BOI) இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கான நிரப்பு நிலையங்களை நிறுவி இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் நேற்று (14.07) கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், சினோபெக் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை எரிபொருளின் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விற்பனையை உள்ளடக்கிய திட்டத்தில் முதலீடு செய்துள்ளது.
இந்த முயற்சியில் தற்போது பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தால் நிர்வகிக்கப்படும் 150 தனியாருக்கு சொந்தமான எரிபொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை அமைக்கும் திட்டமும் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டம் எண். 17க்கு இணங்க, சினோபெக் எனர்ஜி லங்காவின் மேற்பார்வையின் கீழ் இந்தத் திட்டத்திற்கு 20 வருட செயல்பாட்டுக் காலம் வழங்கப்பட்டுள்ளது.
சினோபெக் நிறுவனம் இலங்கையில் பயன்பாட்டில் உள்ள பல வகை எரிபொருள்களை வழங்கவுள்ளதுடன், தானியங்கி கார் கழுவும் மற்றும் கார் சேவை வசதிகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், கன்வீனியன்ஸ் ஸ்டோர்கள், இன்டர்நெட் கஃபேக்கள், தானியங்கு டெல்லர் மெஷின்கள் மற்றும் உணவு மையங்கள் போன்ற சேவைகளை வழங்குவதை இந்த முயற்சியின் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், சினோபெக் photovoltaic systems, electric charging stations, battery swapping, மற்றும் உள்ளூர் சந்தையில் பிற தொடர்புடைய புதிய ஆற்றல் சேவைகளை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.