நடுவர்களைத் தேர்ந்தெடுக்கும் நடுவராக மாவட்ட செயலக கிரிகட் அணி வீரர் தெரிவு!

ஸ்ரீ லங்கா கிரிகட் நிறுவனம் தேசிய ரீதியில் கிரிகட் நடுவர்களைத் தெரிவு செய்யும் நோக்குடன் நடாத்திய போட்டிப் பரீட்சையின் முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில் இப்போட்டிப் பரீட்சையில் தோற்றி சித்தி பெற்ற மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக காணிப்பதிவாளரும், மேலதிக மாவட்ட பதிவாளரும் மாவட்ட செயலக கிரிகட் அணியின் முன்னணி வீரருமாகிய எம்.எம்.எம். பாஹிம் நடுவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனூடாக மேலதிக காணிப் பதிவாளர் பாஹிம் தேசிய கிரிகட் போட்டிகளுக்கான நடுவர்கள் தரப்படுத்தல் வரிசையில் நடுவர் மட்டம் 5 என்ற தரத்தில் போட்டிகளுக்கான நடுவராக கலந்து கொள்ள முடியும்.
இதுதவிர இவர் ஸ்ரீ லங்கா கிரிகட் நிறுவனம் நடாத்திய கிரிகட் வீரர்களுக்கான பயிற்றுவிப்பாளர் நெறியினை பூர்த்தி செய்துள்ளதுடன், காத்தான்குடி மத்திய கல்லூரியின் கிரிகட் அணிக்கான பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றார்.

Social Share

Leave a Reply