யாழ் நெடுந்தீவுக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று!

யாழ் நெடுந்தீவு பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (14-07) நெடுந்தீவு பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.

நெடுந்தீவு பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்தலில் ஆரம்பமான இந்தக் கூட்டத்தில், பிரதேசத்தின் கடல் போக்குவரத்து,சுற்றுலாத்துறை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

மேலும் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் சேவைத்துறை சார்ந்த முன்னேற்றங்கள், அவற்றின் தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.

குறிப்பாக சுகாதாரம், கல்வி, வீட்டுத்திட்டம், உள்ளூராட்சி, கூட்டுறவு, நீர்வழங்கல், மின்சாரம், போக்குவரத்து, சமுர்த்தி, விவசாயம், நீர்ப்பாசணம், வாழ்வாதாரம், மீன்பிடி, வீதி புனரமைப்பு காணிஉள்ளிட்ட பல்வேறு துறைகள் ஆராயப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிலஞானம் ஸ்ரீதரன் மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version