அனைத்து துறைகளிலும் உரிய நியமங்கள் பின்பற்றப்பட வேண்டும் – டக்ளஸ்!

நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்படாத பிரதேசங்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற உள்ளூர் இழுவைப் படகுகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கடற்படை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (14.07) அறிவுறுத்தியுள்ளார்.

நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், உள்ளூர் இழுவைப் படகுகளினால் பாதிப்பு ஏற்படுவதாக பிரதேச கடற்றொழிலாளர்கள் முறையிட்ட நிலையிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை நெடுந்தீவு மக்களுக்கு 24 மணித்தியாலங்களும் மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மின்பிறப்பாக்கிகள் சுழற்சி முறையில் மாற்றப்படுகின்றபோது நேர ஒழுங்கு பின்பற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்
.
அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களைவிட சுமார் 45 ரூபாய் வரையில் விலை அதிகரித்து நெடுந்தீவில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக பிரதேச மக்களினால் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், நாடளாவிய ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகபட்சம் 20 ரூபாய் மாத்திரமே அதிகபட்சமாக வைத்து விற்பனை செய்ய முடியும் என்றும், இதனை மேற்பார்வை செய்யுமாறும் பிரதேச செயலாளரை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே நெடுந்தீவில் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுகின்ற போது உரிய சட்ட நியமங்கள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version