கிளிநொச்சி – பளை இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (15.07) காலை இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் முள்ளிவளை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய எம்பெருமாள் குமரவேல் என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மீது எதிர்திசையில் இருந்து வந்துக்கொண்டிருந்த வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.