வெளிநாடுகளில் இருந்து விமானிகளை அழைத்து வருவோம் – நிமல்!

ஸ்ரீலங்கன் விமான சேவையின் அனைத்து விமானிகளும் நாட்டை விட்டு வெளியேறும் நிலையில் வெளிநாட்டு விமானிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்து பேசிய அவர், ‘இது உலகில் எல்லா இடங்களிலும் பொதுவானது. அவர்கள் வேறு இடங்களில் அதிக ஊதியம் பெறலாம். ஆனால் அவர்களுக்கான அத்தியாவசிய வாழ்க்கை செலவுகள் அதிகமாக இருக்கும். இலங்கையில் வாழ்வது போல் அங்கு வசதியாக வாழ முடியாது.

லண்டனில் உள்ள ஒரு மருத்துவருக்கு மாதம் 5000 பவுண்டுகள் கிடைக்கும். அதேசமயம் இலங்கையில் அவர்களுக்கு 150000 மட்டுமே கிடைக்கும்.

இன்னும் 216 விமானிகள் கைவசம் உள்ளதாகவும் அனைத்து விமானிகளும் வெளியேறினால் நாங்கள் வெளிநாட்டு விமானிகளை இயக்க வைப்போம் ‘எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version