கறுப்பு ஜீலை கலவரத்தை நினைவு கூர்ந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

கறுப்பு ஜீலை கலவரத்தை நினைவு கூர்ந்தும் ஒற்றுமையை வலியுறுத்தியும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (14.07) முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டமானது சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் மூவின மக்களின் பங்கு பற்றுதலுடன் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘இனியும் கலவரம் வேண்டாம், பிரிவினைகள் வேண்டாம், சமூக ஒற்றுமையை குலைக்காதே, ஆட்சியாளர்களே இனவாததிதை தூண்டாதே, யாழ் நூலகத்தை எரித்தது இனவாதமே, நாடு பூராகவும் ஜீலை கலவரத்தை திட்மிட்டு நடத்தியது ஆட்சியாளர்களே’ என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பினர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன என்பனவே இந்த நாட்டின் இன நல்லுறவு சீர்குலைத்து கலவரங்கள் ஏற்படக் காரணம் எனவும், அவ்வாறான ஆட்சியாளர்களை விரட்டியடிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

கறுப்பு ஜீலை கலவரத்தை நினைவு கூர்ந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version