வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் கடற்படை சிப்பாய் கைது!

வவுனியா, புதிய பேரூந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 10 கிலோ 74 கிராம் கேரளா கஞ்சாவுடன் கடற்படை சிப்பாய் ஒருவரை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று இரவு (14.07) கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் கேரளா கஞ்சா கடத்துவதாக வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது ஐந்தாக பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்ட 10 கிலோ 74 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதுடன், அதனை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த பேரூந்தில் பயணித்த கடற்படை சிப்பாயை பொலிஸார் கைது செய்தனர்.

மேலும் குறித்த கடற்படை சிப்பாயிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் முழங்காவிலில் உள்ள முகாமில் பணியாற்றிவரும் 27வயதுடைய நபர் எனவும் தெரிய வந்துள்ளது.

வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவினையும், சந்தேகநபரையும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய  நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version