அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்து காத்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு பொறுப்புக்களை வழங்க அக்கட்சி தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை கொண்டு மேற்கொள்ள அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.
இதன்படி மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் நிறுவன நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவர்களுக்கு இந்தப் பொறுப்பை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஏற்பாடு செய்யுமாறும் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தும் ஜனாதிபதி அக்கறை காட்டாத காரணத்தினால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.