கோட்டாபயவின் ஆட்சியின்போது தேசத்தை அழிக்க சதி செய்யப்பட்டது – சாகர

கோட்டபாய ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சதி நடவடிக்கைகள் குறித்து பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்  சாகர காரியவசம் சில விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தெல்தெனிய தொகுதிக் குழுக் கூட்டம் நேற்று (15.07) நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் சில விடயங்களை பகிர்ந்துகொண்டார்.

அங்கு கருத்து தெரிவித்த பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், “கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு, தூதரகத்தில் ஒரு பெண் தன்னை கடத்தியதாகவும், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், கொலை செய்ய முயன்றதாகவும் முறைப்பாடு அளித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  நான் வேண்டுமென்றே அதை செய்தேன் என்று அந்த பெண் கடந்த வாரம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதனால் போராடி கோத்தபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றார். பின்னர் புதிய ஜனாதிபதி கொண்டுவரப்பட்டார். ஆனால் அந்த ஜனாதிபதியின் தெரிவுக்குப் பின்னர் நாட்டுக்கு ஒரு டொலர் கூட வராமல் பெற்றோல் வரிசைகள் தீர்ந்தது.

14 மணித்தியால மின்வெட்டு 02 மணித்தியாலமாக குறைக்கப்பட்டது, ஒரு கேஸ் டேங்க் கூட வெடிக்கவில்லை. இவை எப்படி நடந்தன? இந்த சதி நாம் நினைப்பது போல் ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்கான சதி அல்ல. இந்த சதி இந்த ஒட்டுமொத்த தேசத்தையும் அழிக்கும் சதி” எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version