தடுமாறி மீண்ட இலங்கை அணி

இலங்கை, பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் வாய்ப்புகள்? பலமான அணிகள் இரண்டுக்கான மோதல்! SriLanaka Vs Pakistan

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடரின் முதற் போட்டி இன்று(16.07) காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இலங்கை அணியை துடுப்பாடட பணித்தது.

எதிர்பார்த்தது போன்றே பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹின் ஷா அப்ரிடி இலங்கை அணியின் ஆரம்ப விக்கெட்களை பதம் பார்க்க, இலங்கை அணி தடுமாறிப் போனது. பலமான துடுப்பாட்ட வீரர்கள் என எதிர்பார்க்கப்பட்ட முக்கிய நான்கு வீரர்கள் 54 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா ஆகியோர் இணைந்து இலங்கை அணியை மீட்டெடுத்தனர். 131 ஓட்டங்களை இருவரும் இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். அஞ்சலோ மத்தியூஸ் 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சதீர சமரவிக்ரம, தனஞ்சய ஜோடி இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கி 57 ஓட்டங்களை பகிர்ந்த வேளையில் சதீர ஆட்டமிழந்தார். அத்தோடு இன்றைய முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்கமால் 94 ஓட்டங்களை பெற்றுள்ளார். தனஞ்சயவின் அபராமன துடுப்பாட்டம் நாளையும் தொடர்ந்தால் இலங்கை அணி முழுமையாக மீள முடியும்.

ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 65.4 ஓவர்களை எதிர்கொண்டு 242 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஷஹின் ஷா அப்ரிடி 3 விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டார். இதன் மூலம் 100 விக்கெட்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக தன் பெயரை பதிவு செய்துள்ளார். நஸீம் ஷா, அப்ரார் அஹமட், அகா சல்மான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

மழை குறுக்கிட்டாமையினால் போட்டியின் முழுமையான 90 ஓவர்களை வீசமுடியவில்லை.

அணி விபரம்

இலங்கை: 1 திமுத் கருணாரட்ன, 2 நிஷான் மதுஷ்க, 3 குசல் மென்டிஸ், 4 அஞ்சலோ மத்யூஸ், 5 தினேஷ் சந்திமால், 6 தனஞ்சய டி சில்வா, 7 சதீர சமரவிக்ரம, 8 ரமேஷ் மென்டிஸ், 9 பிரபாத் ஜெயசூரிய, 10 கஸூன் ரஜித 11 விஷ்வா பெர்னாண்டோ

பாகிஸ்தான்: 1 அப்துல்லா ஷபீக், 2 இமாம்-உல்-ஹக், 3 ஷான் மசூட், 4 பபர் அஸாம் , 5 சர்பராஸ் அகமட்6 சவுத் ஷகீல், 7 அகா சல்மான், 8 நௌமன் அலி, 9 நசீம் ஷா, 10 அப்ரார் அகமது , 11 ஷாஹீன் ஷா அப்ரிடி

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version