ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான பொலிஸ் உத்தியோகத்தர்களை இனங்கண்டு கைது செய்ய, பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் புலனாய்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிலையங்களில் இவ்வாறான போதைப் பொருட்களை பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்படும் உத்தியோகத்தர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க புலனாய்வு அதிகாரிகளை ஈடுபடுத்துமாறும் பொலிஸ் மா அதிபர் அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
அதன்படி, கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்துவதாக கண்டறியப்பட்ட காவல்துறை அதிகாரிகள் முதல்கட்டமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்படுவர எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.