மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கும்புக்கன் வெள்ளச்சி கடே பகுதியிலுள்ள வீடொன்றில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த பெண் 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபரான உயிரிழந்த பெண்ணின் கணவன் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.