பாராளுமன்றம் இன்று (18) காலை 09.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.
இன்றைய அமர்வின்போது, சுங்க கட்டளைச் சட்டம் மற்றும் இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் பல ஒழுங்குமுறைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நாளைய (19.07) அமர்வில், ஊழலுக்கு எதிரான சட்டமூலம், குறித்த விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் வழக்குகள் தொடர்பான தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பான விடயங்களை ஆராய்ந்து அதற்கான தகுந்த பரிந்துரைகளை வழங்குவதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பது தொடர்பிலும், யோசனை முன்வைக்கப்படவுள்ளது.