அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருந்து பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (17.07) நடைபெற்றது.
உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் மகளிர் சிறுவர், அலுவல்கள் மற்றும் சமூகவலுப்படுத்துகை அமைச்சினால் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, நிருவாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்ஸான், நிதி உதவியாளர் ஏ.சி. முஹம்மட், சிறுவர் மற்றும் மகளீர் அபிவிருத்தி பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.இஸ்ஸானா, முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வை. திருப்பதி, என்.எம்.சிபானா சிறின் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
