சூடுவைத்து சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் சிறுவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 12 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த சிறுவனின் தந்தையே இவ்வாறு நெருப்பால் சூடு வைத்து காயப்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், சிறுவனின் கை, கால், முகம் என உடம்பில் பல இடங்களிலும் காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றன.
தீக்காயங்களுடன் நேற்றைய தினம் (17.07) குறித்த சிறுவன் பாடசாலைக்குச் சென்றுள்ளதுடன் அதனை அவதானித்த ஆசிரியர்கள் அவனை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவனிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.