மொரட்டுவ – எகொட உயன பிரதேசத்தில் இன்று (18) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
மொரட்டுவைக்கு குறுக்கே உயன பகுதியில் சக்கரத்தை மாற்றுவதற்காக நிறுத்தப்பட்ட பேருந்துடன் கெப் வண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த கெப் வண்டி பேலியகொட மீன் சந்தைக்கு சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதில் வண்டியில் பயணித்த 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதாலேயே விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எகொட உயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.