பொருளாதார சீரழிவு குறித்து ஆராயும் குழுக்கூட்டம் இன்று!

நாட்டின் பொருளாதாரம் திவால்நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிமுக கூட்டம் இன்று (ஜூலை 18.07) நடைபெறவுள்ளது.

குறித்த குழுவின் கூட்டம் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தீர்மானங்களை எடுத்த தரப்பினரும் பொருளாதாரம் தொடர்பான விடயங்களை ஆராயும் வல்லுனர்களும் இதன்போது கலந்துகொள்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்கள் குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply