லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் இன்று (19.07) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வைத்தியசாலையின் அவசர சேவைகள் தொடர்ந்தும் இயங்கும் என சங்கம் கூறுகிறது.

இதேவேளை வைத்தியசாலைகளில்  தரமற்ற மருந்து பாவனைக் குறித்த விசாரணை அறிக்கை வரும் வெள்ளிக்கிழமை கிடைக்கப்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version