பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது என நேபாளம், மாலைதீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பரிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (18.07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கை தற்போது எதிர்பாராத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால் இந்த முடிவுகள் சரியான நேரத்தில் எடுக்கப்பட வேண்டும். தற்போதைய வேலைத்திட்டத்தை அப்படியே தொடர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதுதான் இதில் முக்கியமானது. தயவு செய்து உண்மையை பேசுங்கள், இது அரசியல் செய்ய வேண்டிய நேரம் அல்ல, சரியானதை செய்ய வேண்டிய நேரம். இலங்கை மீண்டும் தலை தூக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.