ஒரு இலட்சம் பேர் நோய்வாய்பட்டு வைத்தியசாலைக்கு சென்றால் அவர்களில் அனைவரும் குணமடைய மாட்டார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இதனால்தான் மருத்துவமனைகளுக்கு அருகில் மலர்வளையங்களுடன் கூடிய கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு சுமார் 20 வருடங்கள் ஆகிறது எனவும், தடுப்பூசி போடப்பட்ட மேலும் 12 குழந்தைகளும் அப்போது சிறுமி இருந்த வார்டில் இருந்ததாகவும் அவர் கூறினார்.