தலதா பெரஹெரவிற்கு விதிக்கப்பட்ட மின் கட்டணம் குறித்து விசேட கலந்துரையாடல்!

தலதா பெரஹெரவிற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து இன்று (19.07) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தியவதன நிலமே மற்றும் கண்டி மாவட்ட செயலாளர் சிவ்மஹா தேவால பஸ்நாயக்க நிலமேஸ் உட்பட பல பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருட எசல பெரஹெராவுக்காக இலங்கை மின்சார சபை ஸ்ரீ தலதா மாளிகைக்கு ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான மின் கட்டணத்தை சமர்ப்பித்திருந்தது.

இந்த விடயம் தொடர்பில் எதிர்கட்சி அரசியல் குழுக்கள் பலதரப்பட்ட கருத்துக்களை வெளியிட்டதையடுத்து இது சமூகத்தில் பேசுபொருளாக மாறியது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version