வவுனியா நகரத்தில் தீ விபத்து

வவுனியா நகரப்பகுதியில் உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று(18.07) இரவு 8.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கண்டி வீதியில், இரண்டாம் குறுக்குத் தெருவுக்கு முன்னதாக அமைந்துள்ள லக்சனா உணவகமே இவ்வாறு தீ பற்றி இருந்துள்ளது.

வாயுக்கொள்கலனில் ஏற்பட்ட கசிவே விபத்துக்கு காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது. விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தீ ஏற்பட்டதனை தொடர்ந்து வவுனியா நகரசபை தீயணைப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கடையின் பல பகுதிகள் எரிந்து சாம்பலாகி போயுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version