வவுனியாவில் முன்னுதாரணமான மாற்றங்களை நோக்கிய ஆராய்ச்சிகள் மாநாடு!

வவுனியா பல்கலைக்கழகத்தின் இரண்டாவது மாநாடு ‘முன்னுதாரணமான மாற்றங்களை நோக்கிய ஆராய்ச்சிகள்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் மங்களேஸ்வரன் அதற்கான இணையத்தளத்தினையும் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். 

வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இத்போது கருத்து வெளியிட்ட அவர், ”எதிர்வரும் கார்த்திகை மாதம் 17 ஆம் திகதி குறித்த மாநாடு இடம்பெறவுள்ளதாகவும்  அதற்கான ஆய்வு கட்டுரைகளையும் அனுப்பி வைக்குமாறு  கேட்டுக்கொண்டார்.

இந் நிலையில் ஆய்வு கட்டுரைகளை vuirc2023@vau.ac.lk என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவித்ததோடு மேலதிக விபரங்களுக்கு www.vau.ac.lk/vuirc2023 என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் தெரிவித்தார். 

இதன்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆய்வு மாநாட்டுக்கு பொறுப்பான விரிவுரையாளர்களும்கலந்துகொண்டிருந்தனர். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version