மகளிர் உலகக்கிண்ண காற்பந்தாட்ட தொடர் ஆரம்பம்!

இன்று மகளிர் உலகக்கிண்ண காற்பந்தாட்ட தொடர் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் ஆரம்பித்துள்ளது. ஒன்பதாவது மகளிர் உலகக்கிண்ண தொடர் ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

32 நாடுகளது அணிகள் இந்த தொடரில் மோதுகின்றன. 8 குழுக்களில் தலா 4 அணிகள் வீதம் முதற் சுற்றில் மோதுகின்றன. அதன் பின்னர் நொக் அவுட் சுற்று தொடர் ஆரம்பமாகும். 

இன்று நடைபெற்ற முதற் போட்டியில்  நியூசிலாந்து அணி நோர்வே அணியை 1-0 என வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா அணி அயர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

நாளையதினம் 03 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

Social Share

Leave a Reply