வவுனியா பறனட்டகல் பகுதியிலே பாரவூர்தி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை முருகண்டியில் இருந்து வவுனியா நோக்கி வந்த பாரவூர்த்தி பறன்நட்டகல் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்தே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் மேற்கொண்டுள்ளனர்.
