இந்தியாவின் மணிப்பூரில் இன்று (21.07) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கம் மணிப்பூரின் உக்ருல் பகுதியில் அதிகாலை 5.01 மணியளவி, ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இதற்கு முன்னதாக, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் பகுதியில் அரை மணி நேரத்தில் மூன்று நிலநடுக்கங்களின் தாக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.