நேற்று (20.07) மாலை தலவத்துகொட வெலிபாறை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வெலிபாறை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் சிகிச்சைகளுக்காக ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.