80 இலட்சம் ரூபாய் பெறுமதியான அம்பருடன் இருவர் கைது!

மாத்தறையில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான அம்பருடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 08 கிலோ பெறுமதியுடைய இவ்விரு சந்தேசநபர்களையும் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் நேற்று (20.07) கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் மிரிஸ்ஸ பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபரொருவரும் வெலிகம பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பர் எனப்படும் பொருள் திமிங்கலங்களின் உடலிலிருந்து பெறப்படுகிறது. இந்த பொருள் உலகின் விலை உயர்ந்த வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version